இலைப்புள்ளி  நோய்: செர்கோஸ்போரா பெட்டிகோலா 
             
              அறிகுறிகள்: 
           
            
              - பொதுவாக  இலைப் பரப்பில் தோன்றும். அதிக ஈரப்பதம் இந்த நோய் பரவுவதற்கு சாதகமாகும்.
 
              - இலையின்  மேற்பரப்பில் எண்ணற்ற சிறிய வட்டவடிவ புள்ளிகள் தோன்றும். இவை பெரிதாகி, பழுப்பு நிறம்  அல்லது ஊதாநிறமாக மாறும்.
 
              - தனித்தனிப்  புள்ளிகள் வட்டவடிவில் காணப்படும் ஆனால் இவை ஒன்றினைந்து இலை முழுவதும் பரவி மடிந்து  விடும்.
 
              - இந்த  புள்ளிகள் காய்ந்து தடப்பட்ட துளைகள் போன்று தோன்றும். அதிக தாக்குதலின் போது, இலைப்  பரப்பு முழுவதும் பரவி முதிர்வதற்கு முன்னரே மடிந்துவிடும்.
 
              - இலைகள்  மடிவதால், செடியின் மேல்பகுதியில் கோண வடிவிலும் அடிப்புறத்தில் இறந்த இலைகள் கூட்டமாக  காணப்படும்.
 
              - வளரும்  பருவம் முழுவதும் இலைகள் உதிர்ந்துவிடும். வேரின் அளவு குறையும். மகசூலும் குறையும்.  வயதான இலைகள் பொதுவாக பாதிக்கப்படும்.
 
             
            கட்டுப்பாடு: 
            
                - பாதிக்கப்பட்ட  செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.
 
                - பயிர்  சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
 
                - காப்பர்  ஆக்ஸி குளோரைடு 10.3% 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
 
              | 
             
               
             
               
               |